தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு உள்பட 38 வகையான தேர்வுகளை நடத்துவது எப்போது என்பது குறித்து ஆலோசனை விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாளை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், குரூப்-2, குருப் 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை நடத்தும் தேதி குறித்து நாளை ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

நாளைய ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு உள்பட 38 வகையான தேர்வுகள் நடத்தும் தேதிகள் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடத்தப்படாததால் வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களை கணக்கில் கொண்டு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version