செய்திகள்

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு எப்போது? – டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி

Published

on

அரசு பணிகளை தேர்வு மூலம் பெறுவதற்காகவே டின்.என்.பி.எஸ்.சி உருவாக்கப்பட்டது. எனவே, பல வருடங்களாகவே பலரும் வி.ஏ,ஓ, குரூப்-1, குரூப்-2, குரூப் 2-ஏ போன்ற தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அதிகாரி, ஆர்.ஐ என பல அரசு பதவிகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களாக கொரொனா வைரஸ் பரவலால் இந்த தேர்வு சரியாக நடைபெறவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் காணப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.என்.பி.எஸ். சி தலைவர் பாலச்சந்திரன் ‘மே 21ம் தேதி குரூப் – 2, குரூப்-2 ஆகிய தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்று வந்த நிலையில் இனிமேல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடக்கும். பிற்பகலுக்கான தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். குரூப் 2 மற்றும் குரூப்2-ஏ தேர்வு பற்றிய அறிவிப்பாணை பிப்.23 டின்.என்.பி.எஸ்.சி இணையத்தில் வெளியிடப்படும்.குரூப்2 தேர்வுக்கு பிப் 23 முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ’ என அவர் தெரிவித்தார்.

Trending

Exit mobile version