தமிழ்நாடு

தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published

on

தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது என்பது தெரிந்ததே

தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு என இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தது. இந்த கோரிக்கையை தற்போதுதான் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக டிஎன்பிஎஸ்சி விவரம் கோரியுள்ளது

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்விக்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பிளஸ் 1 பிளஸ் டூ அல்லது பட்டப் படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை இணையதளத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்வழியில் கல்வி பயின்ற விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழை செப்டம்பர் 16க்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version