தமிழ்நாடு

குரூப் 1 தேர்ச்சி பெற்றால் ஐஏஎஸ் அந்தஸ்து: நீதிமன்றம் ஆலோசனை!

Published

on

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றால் ஐஏஎஸ் அந்தஸ்து கொடுப்பதற்கான அமைப்புக்கு நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது .

தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதினால் மட்டுமே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில் சேரமுடியும் என்ற நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்திய குரூப்-1 தேர்வு எழுதி பல்வேறு பணிகளில் இருக்கும் 98 பேர் தங்களை மாநில அரசின் சிவில் சர்வீஸில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்த நிலையில் இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது/ இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ’தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘துணை ஆட்சியர் அந்தஸ்தின் கீழ் உள்ள பணிகள் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றில் திருத்தம் செய்யாமல் மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் சிவில் சர்வீஸ் பதவியில் அமர்த்துவது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப் 1 தேர்வு மூலம் தேர்வான அதிகாரிகளுக்கு கலெக்டருக்கு இணையான பதவிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழ்நாடு ஆட்சிப் பணி அமைப்பு அமைக்க வேண்டும் என நீதிபதிகள் ஆலோசனை கூறினார். துணை ஆட்சியர் அந்தஸ்தில் வரக்கூடிய பதவிகளை கண்டறிவதற்கான குழுவை 6 மாதங்களில் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version