தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டவுன்லோடு செய்யும் இணையதளம் அறிவிப்பு!

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை அடுத்து அந்த ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு வரும் மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது என ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அந்த இணையதளத்தில் தேர்வர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in ஆகிய இரண்டு இணையதளங்களில் வெளியாகி உள்ள ஹால்டிக்கெட்டுக்களை டவுன்லோட் செய்து கொண்டு தேர்வு நாளின்போது கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்தவர்கள் மேற்கண்ட இரண்டு இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version