தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: இதுவரை 13 லட்சம் விண்ணப்பம், இன்னும் 3 நாள் தான்

Published

on

டி.என்பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று நாட்களில் இன்னும் அதிகமான அளவு விண்ணப்பம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு கடந்த சில நாட்களாக விண்ணப்பம் செய்யப்பட்டது என்பதும், சராசரியாக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

7307 காலியிடங்களுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இன்னும் மூன்று நாட்களில் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் இப்பதால் ஆன்லைன் மூலம் இன்னும் அதிக அளவு விண்ணப்பங்கள் பெற வாய்ப்பிருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்

வரும் 28ம் தேதி வரை www.tnpsc.gov.in/ www.tnpscexamsin என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒரு முறைப் பதிவு எனப்படும் நிரந்தரப் பதிவு (OTR) மற்றும் தன்விவரப் பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக் கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version