வேலைவாய்ப்பு
2018-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது..!
தமி நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி பணிக்கு எடுப்பது வழக்கம்.
சில மாதங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பினை தமிழ் நாடு அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி அதற்கான அறிவிப்பினை வெளியிட்டது.
விண்ணப்ப தேதி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு 10/08/2018 முதல் 09/09/2018-ம் தேதி வரை விண்ணப்பம் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
தேர்வு தேதி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 11/11/2018ம் தேதி நடைபெறும்.
காலியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கீழ் 1,119 நபர்கள் பணிக்கு எடுக்கப்பட உள்ளனர்.