தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வின் புதிய முடிவுகள் எப்போது?

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான புதிய முடிவுகள் எப்போது வெளிவரும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கான திருத்தங்கள் அரசாணையில் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தேர்வின் புதிய முடிவுகள் தயாராகி வருவதாகவும் இந்த முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய பணிகளுக்கான குரூப்-1 தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த தேர்வின் முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய பணிகளுக்கு நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ள நிலையில் நேர்முகத்தேர்வுகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version