தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரமேனன் அவர்கள் அறிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அட்டவணையையும் அவர் வெளியிட்டு வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ நிலைகளில் 5231 காலி பணியிடங்கள் உள்ளது என்றும் விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 மற்றும் 2ஏ நிலைகளில் பழைய காலி பணியிடம் 5255 என்றும் புதிய காலி பணியிடம் 3000 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படும் வாய்ப்பிருப்பதாகவும், குரூப் 4 தமிழ் மொழி தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் பெறவேண்டும் என்றும் பாலசந்திர மேனன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் குரூப்-2ஏ தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்றும் ஒரு குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் ஒரு வாரத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் மூலம் 10,000 அரசு வேலை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த அவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இனி முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓ.எம்.ஆர் தாளில் கருப்பு மையில் மட்டுமே தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் விடைத்தாளில் விடை எழுத அளவோடு இடம் விடப்படும் என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யாரும் தற்போது பணியில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version