தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேதி திடீர் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு

Published

on

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு ஜூன் 26 அன்று தாள்-1 தேர்வு நடத்தப்படும் என்றும் அதே நாள் பிற்பகலில் தாள்-2 தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு வருகிற ஜூலை மாதம் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version