தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வு திடீர் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சென்னையில் ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் போட்டி தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் ஆகியவைகளுக்கு எந்தவித தடையும் கிடையாது என்றும், தேர்வுகள் எழுத வரும் மாணவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 9ஆம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு திடீர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் அந்த தேதியில் நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜனவரி 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வை எழுதலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்ட தகவல் விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version