தமிழ்நாடு

இனி டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை டவுன்லோடு செய்யலாம்: தேர்வாணையம் அறிவிப்பு

Published

on

இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முடிவுகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்கள் இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தேவைப்படுவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி தங்களுடைய விடைத்தாள் நகலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த நடைமுறைக்கு தேர்வர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்வுகள் தங்களுடைய விடைத்தாள்களை டவுன்லோட் செய்து தாங்கள் எந்த இடத்தில் தவறு செய்துள்ளோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதும் தங்களது உண்மையான மதிப்பெண் இது தான் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version