வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: கால்நடை உதவி மருத்துவர் வேலை!

Published

on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது நேரடி நியமனம் மூலம் 1141 கால்நடை உதவி மருத்துவர் வேலைகளையும், தற்காலிக அடிப்படையில் 636 வேலைகளை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

வேலைகள்: Veterinary Assistant Surgeon

காலியிடங்கள்: 1141+ தற்காலிக அடிப்படையில் 636

மாத சம்பளம்: ரூ.55,500 – 1,75,700

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

கல்வித்தகுதி: கால்நடை மருத்துவத் துறையில் பி.வி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.

வயது: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வடிவத்திலான வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150, விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்
.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 18.11.2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 19.12.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_32_notifn_vet_asst_surg.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.12.2019

seithichurul

Trending

Exit mobile version