வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: தமிழக அரசுத் துறையில் வேலை!

Published

on

தமிழக அரசுத் துறையில் காலியிடங்கள் 69 உள்ளது. இதில் உதவி ஆணையர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை நிரப்பிடுவதற்கான புதிய அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 69

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. துணை ஆட்சியாளர் – 18
2. துணை கண்காணிப்பாளர் (காவல்துறை) – 19
3. உதவி ஆணையாளர் (வணிக வரி) – 10
4. துணை பதிவாளர் (கூட்டுறவுச் சங்கங்கள்) – 14,
5. உதவி இயக்குநர் (கிராமப்புற வளர்ச்சி) – 07
6. மாவட்ட அதிகாரி (தீ மற்றும் மீட்பு சேவைகள்) – 01

மாத சம்பளம்: 56,000 முதல் 1,77,500 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதி மாறுபடுகிறது. வணிகவியல் அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள், சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். உடற்தகுதி குறித்த தகவல்களை அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 01.07.2020 தேதியின்படி, உதவி ஆணையாளர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர், துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியாளர் உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்குமே 21 முதல் 37 வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்கட்டணம்: புதிதாக விண்ணப்பிப்போர் தேர்வுக்கட்டணமாக ரூ.150, ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். முதல்நிலைத் தேர்வு கட்டணமாக ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாகச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்னும்
இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.02.2020

மேலும் முழு விபரங்கள் அறிந்துகொள்ள www.tnpsc.gov.in அல்லது http://tnpsc.gov.in/Notifications/2020_01_NOTIFYN_GR_I_SERVICES.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.

எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் தேதி: உத்தேசமாக 05.04.2020 என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.02.2020

முதல்நிலை எழுத்துத் தேர்வு தமிழகத்தின் அரியலூர், சென்னை, சிதம்பரம், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவண்ணமாலை, திருவாரூர், தூத்துக்கு, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், வேலூர்,விருதுநகர் என 32 மாவட்டங்களில் நடைபெறும். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும்.

seithichurul

Trending

Exit mobile version