தமிழ்நாடு

தமிழகத்தில் 6 டிகிரி வெப்பநிலை உயரக்கூடும்; இந்த நேரத்தில் வெளியே வராதீர்கள்- அதிர்ச்சி எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் வரும் நாட்களில் இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் தெரிவிக்கையில்,

01.04.2021 முதல் 04.04.2021 வரை: தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

05.04.2021: கரூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 1200 முதல் பிற்பகல் 0400 வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும், ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version