சினிமா செய்திகள்

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மூடப்படுகிறது தியேட்டர்கள்: ‘வலிமை’ ரிலீஸ் என்ன ஆகும்?

Published

on

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக மூடப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதால் ‘வலிமை’ ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

valimai

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று ஒரே நாளில் சுமார் 3000 பேர்கள் தமிழகத்திலும் அதில் 1,500 பெயர்கள் சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் முழுமையாக மூடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டால் கண்டிப்பாக ‘வலிமை’ ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்றும் மூன்றாவது அலை முடிந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பிய பிறகே ‘வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் ‘வலிமை’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Trending

Exit mobile version