வணிகம்

ஜவளி, வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்.. காரணம்..

Published

on

இனி சில மாதங்களில் ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்படும் என்று தகவல்கள் வந்துள்ளன.

பொதுவாக எந்தவொரு பொருளானாலும் அதன் விலையானது மூலப்பொருட்களின் விலை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகின்றன. மூலப் பொருட்களின் விலை கூடினால், அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தி பொருட்களின் விலையும் கூடிவிடும்.

அந்த வகையில், தற்போது அட்டை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக பசை மற்றும் கிராப்ட் தாள், ஸ்ட்ரிச்சிங்பின், காகிதம் உள்ளிட்ட பொருட்களின் விலை 5 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

மேலும், அட்டை உற்பத்திக்கு தேவையான காகித கழிவுகளை குறிப்பிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கி வந்தன. தற்போது அந்த நிறுவனங்களும் காகித சப்ளையை நிறுத்தி விட்டன.

இதன் காரணமாக ஒட்டுமொத்த அட்டை உற்பத்தியின் விலையும் உயருகிறது. ஜவுளி, வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்தும் அட்டையில் வைத்து தான் நேர்த்தியாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அட்டையின் விலை கூடும் போது, உணவுப்பொருட்கள் வரையில் அதன் தாக்கம் ஏற்படுகிறது.

எனவே, இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளிநாட்டிலிருந்து காகித கழிவுகளை வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version