தமிழ்நாடு

வேலை கேட்டு முதல்வர் பழனிசாமி வீட்டின் முன்பு காத்திருக்கும் ஆசிரியர்கள்!

Published

on

பணி வழங்கக் கோரி முதல்வர் பழனிசாமியின் வீட்டு முன்பு ஏராளமான ஆசிரியர்கள் காலை முதலே காத்திருக்கின்றனர்.

தமிழக முதல்வர் பழனசாமி இன்றோடு 4 நாளாவது நாளாக சேலத்தில் பல்வேறு கூட்டங்கள், பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தால், 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்படும் என்ற நிலை இருந்தது.  பின்பு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது. இதனால் 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் இன்று காலை முதல்வர் பழனிசாமியின் வீட்டு முன்பு ஏராளமான ஆசிரியர்கள் குவிந்துள்ளனர். கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முதல்வர் வீட்டு முன்பு திரண்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Trending

Exit mobile version