தமிழ்நாடு

சென்னையில் கட்சி போஸ்டர்கள் ஒட்டியதற்காக ரூ.2.7 லட்சம் அபராதம் வசூல்!

Published

on

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் சென்னையில் ஒட்டிய 3700 போஸ்டர்களை நீக்கி, 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை தி.நகர் 117வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டவர் பி.ஆறுமுகம். தேர்தல் சமயத்தில் இவர் ஒட்டிய போஸ்டர்களை நீக்கி, அந்த இடங்களில் திமுக தங்களது ஆட்சி பலத்தைப் பயன்படுத்தி அவர்களது தேர்தல் பரப்புரை போஸ்டர்களை ஒட்டியதாக, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

பிப்ரவரி 16-ம் தேதி அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை முழுவதும் உள்ள கட்சி பொஸ்டர்களை நீக்க வேண்டும். அதற்கு போஸ்டர் ஒட்டியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை நீதிபதி எம்.என் பண்டாரி, பரத சக்ரவர்த்தி தலைமையிலான அமர்விடம் விசாரணைக்கு வந்தது. அப்போது விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், சென்னை நகரம் முழுவதும் அரசியல் கட்சியினர்கள் 3700 போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். அதை நீக்கி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் வசூலித்ததாகத் தெரிவித்தது.

seithichurul

Trending

Exit mobile version