தமிழ்நாடு

TN 10th Results | தமிழ்நாடு 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்? சிறப்புத் தேர்வு எப்போது?

Published

on

தமிழ்நாடு 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்புப் பொதுத் தேர்வு எழுதி இந்த ஆண்டே மேல் படிப்பைத் தொடர முடியும்.

எனவே 10-ம் வகுப்பு சிறப்புப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

ஜூன் 2019, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு
மார்ச் 2019-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து,தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 14.06.201 முதல் 22.06.2019 வரை நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version