தமிழ்நாடு

TN 10th Results 2019 | தமிழ்நாடு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்… மறுமதிப்பீடு செய்வது எப்படி?

Published

on

தமிழ்நாடு 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் இன்று காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பென் மெறாத மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling or Revaluation) விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 2019 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 02.05.2019(வியாழக்கிழமை) முதல் 04.05.2019 (சனிக்கிழமை) சனிக்கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் கட்டணம்
பகுதி – I மொழி – ரூ.305/-
பகுதி – II மொழி (ஆங்கிலம்) – ரூ.305/-
பகுதி – III – கணிதம், அறிவியல் மற்றும் – ரூ.205/-
சமூக அறிவியல்
பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் – ரூ.205/-

மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

seithichurul

Trending

Exit mobile version