தமிழ்நாடு

தமிழ்நாட்டின் வருவாய் 36.4% அதிகரிப்பு, கடன் வாங்குவது 30.3% ஆக சரிவு!

Published

on

தமிழ்நாட்டின் வருவாய் 36.4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடன் வாங்குவது 30.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் நிதி செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் வாங்கும் விகிதம் 30.3 சதவிகிதம் சரிந்து 24,403 கோடி ரூபாய்க் கடன் வாங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இதுவே 35,000 கோடி ரூபாயாக இருந்தது என ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகளின் படி தெரியவந்துள்ளது.

2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் வருவாய் 1.12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே சென்ற ஆண்டு 85,209.74 கோடி ரூபாயாக இருந்தது.

மாநிலத்தின் வரி வருவாய் 36.4 சதவிகிதம் அதிகரித்து 68,638 கோடி ரூபாயாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதுவே 50,324 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version