தமிழ்நாடு

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? அப்ப உங்களுக்கு தான் இந்த நியூஸ்!

Published

on

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2021 முதல்
13/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக
4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து
10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும்
17/01/2021 முதல் 19/01/2021 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன்,
3,393 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

 

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து
நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை
(டீரவநச சுiபே சுடியன) வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version