தமிழ்நாடு

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 வினியோகம்! ரெடியா மக்களே!!

Published

on

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை ரூபாய் 2500, இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகையாக ரூ. 2500 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அத்துடன் 1 கிலோ பச்சரிசி, 20 கிராம் திராட்ச்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 1 கிலோ சர்க்கரை மற்றும் 5 அடி நீள கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கான டோக்கன் வீடுவீடாக விநியோகிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் மேற்கண்ட பொங்கல் பரிசுத்தொகை, பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை இன்று காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் அடுத்த கட்டமாக மதியம் 2:30 முதல் 5:30 வரை பெற்றுக்கொள்ளலாம். இன்று பரிசுத்தொகையைப் பெற முடியாதவர்கள் ஜனவரி 13, 19 தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக 5 ஆயிரத்து 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும்  18,923 இலங்கை தமிழர்கள் இதன் மூலமாக பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version