Connect with us

தமிழ்நாடு

‘தமிழக காவலர்களுக்கு வார விடுப்பு’ விஷயத்தில் உள்ள ஓட்டையை சுட்டிக்காட்டிய சீமான்

Published

on

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும், ‘அண்மையில் கொண்டுவரப்பட்ட நடைமுறையின்படி, காவலர்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது எனும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஓய்வின்றித் தொடர் காவல் பணியில் ஈடுபடும் காவலர்களது உடற்சோர்வு, மனஅழுத்தத்தைப் போக்கவும், குடும்பத்தோடு செலவிட அவர்களுக்கு நேரத்தை வழங்கும் விதமாகவும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு வழங்க வேண்டுமெனத் தொடர்ச்சியாக நாங்கள் முன்வைத்த கோரிக்கை முழக்கத்திற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்களென நம்பி, அரசுக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தவேளையில், அவ்விடுப்பு எடுப்பதற்கு ஊதியப்பிடித்தம் செய்யப்படும் செய்தி பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

எவ்வித நேரக்கட்டுப்பாடுமின்றி இரவு, பகலாகக் காவல் பணியாற்றி வரும் காவலர்களுக்கு ஊதியத்தோடு கூடிய ஒருநாள் விடுப்பு வழங்குவதுதான் அவர்களை இளைப்பாற்றும் தகுந்த நடவடிக்கையாகும். அதனைவிடுத்து, மிகைநேரப்பணி ஊதியத்தை (ETR) துறப்பதாக இருந்தால் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என நிபந்தனையோடு அறிவிப்புச் செய்வது எவ்விதத்திலும் காவலர்களுக்கு நன்மை பயக்காது; இன்றைய பொருளாதாரச்சூழலில் ஊதியத்தை இழந்து விடுப்பு எடுப்பதை எந்தக் காவலரும் ஏற்க மாட்டார்கள். ஊதியத்தை இழந்து விடுப்பு எடுத்துக்கொள்வது ஏற்கனவே நடைமுறையிலிருக்கையில், இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் நடைமுறையும் அதிலிருந்து மாறுபடவில்லையெனும்போது ஒரு நாள் விடுப்பு அறிவிப்பு காவலர்களுக்கு எவ்விதப்பயனையும் தராத வெற்றுச்சடங்காகப் போய்விடும்.

ஆகவே, காவலர்களின் உடல்நலனையும், மனநலனையும் மனதில்கொண்டு காவலர்களுக்கு விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்18 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!