தமிழ்நாடு

தீபாவளிக்கு விதிமுறை மீறி பட்டாசு வெடித்தால்… காவல் ஆணையர் எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் தீபாவளியின் போது, விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியின் போது, காலை 6 மாணி முதல் 7 மாணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை என நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளி நாளில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் தடுக்கும் வகையில் காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பட்டாசு வெடிக்கும் விதிமுறை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கவும் அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், சென்ற ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி, பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எனவே தீபாவளியின் போது மக்கள் பாதுகாப்போடும், விதிகளைப் பின்பற்றியும் பட்டாசு வெடிக்குமாறும் காவல் துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version