தமிழ்நாடு

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை: பரபரப்பு தகவல்!

Published

on

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணம் அடைந்தது குறித்து பாகிஸ்தானியர் சிலர் தவறான கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும், இதில் கேப்டன் வருண்சிங் தவிர மீதி உள்ள 13 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்ய வேண்டாம் என ஏற்கனவே என இந்திய விமான படை கேட்டுக் கொண்டுள்ளது என்பதும், அதையும் மீறி டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தவர்கள் மீது தமிழக அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து டுவிட்டரில் சில தவறான பரப்பப்பட்டு வருவதாக தமிழ்நாடு குற்றப்பிரிவு காவல் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து விசாரணை செய்த போது பாகிஸ்தானில் இருந்து சில டுவிட்டர் கணக்குகள் இந்த வேலையை செய்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து ட்விட்டரில் தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தானின் சில டுவிட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்து தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version