தமிழ்நாடு

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்திக்கச் சென்ற தமிழக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்!

Published

on

டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பெருந்திரளான விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து கொண்டே போகிறது.

அதேபோல, போராட்டத்துக்கு சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் அதிகரித்து வருவதாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்திக்கச் சென்றுள்ளனர்.

அவர்களை அங்கு பலத்த தடுப்புகளுடன் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்த போலீஸ், தடுத்து நிறுத்தியது.

டெல்லியின் காசியாபாத் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை பஞ்சாப் மாநில எம்.பி.,யும் முன்னாள் வேளாண் துறை அமைச்சருமான ஹர்சிம்ரட் கவுர் பாதல் தலைமையில் சந்திக்கச் சென்றுள்ளனர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

திமுக எம்.பிக்களான கனிமொழி, திருச்சி சிவா, ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் விவசாயிகளைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version