தமிழ்நாடு

நீக்கப்படுகிறாரா பிடிஆர்? தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்!

Published

on

தமிழக அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நிதியமைச்சர் யூடிஆர் பழனிவேல்ராஜன் நீக்கப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் கடந்த மே மாதம் மொத்தம் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் ஒருசிலரின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியாக இல்லை என்றும் எனவே அவர்களை அமைச்சரவையை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு புதியவர்கள் சிலரை அமைச்சரவையில் சேர்க்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு சிலருக்கு துறை மாற்றம் செய்யவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து தங்களுடைய துறையின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்காமல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் இரண்டு அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதேபோல் ஊழலுக்கு வழிவகுக்கும் அமைச்சர் ஒருவரும் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் மொத்தம் நான்கு அமைச்சர்கள் முதல்வரின் ஹாட் லிஸ்டில் இருப்பதாகவும் அவர்கள் நீக்கப்பட்டு புதிதாக 7 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதை அடுத்து அவர்களுக்கு கூடுதலாக சில துறைகளை கொடுக்கவும் முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழக நிதித்துறை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மீது திமுகவின் மூத்த தலைவர்களே அதிருப்தி தெரிவித்துக் வருவதாகவும், எனவே அவர் அமைச்சரவையிலிருந்து நீக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியான பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version