தமிழ்நாடு

10 ஆண்டுகளில் 1500 மடங்கு அதிகரித்த அதிமுக அமைச்சரின் சொத்து மதிப்பு; வெளிவந்த பகீர் ரகசியம்!

Published

on

10 ஆண்டுகளில் 1500 மடங்கு அதிகரித்த அதிமுக அமைச்சரின் சொத்து மதிப்பு; வெளிவந்த பகீர் ரகசியம்!தமிழக அரசின் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக உள்ளவர் கே.சி.வீரமணி. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். தொடர்ந்து தனது சொத்துப் பட்டியல் குறித்த விபரங்களையும் அவர் தேர்தல் அதிகாரியிடம் சமர்பித்தார். அதில் திடுக்கிடும் சில தகவல்கள் வெளி வந்துள்ளன. 

கடந்த 2011 ஆம் ஆண்டு, வீரமணி தேர்தலில் போட்டியிடும் போது தாக்கல் செய்த சொத்து மதிப்பீட்டில் தனக்கு 2.3 லட்சம் ரூபாய் மட்டுமே சொத்துகள் இருந்ததாக ஆவணங்கள் சமர்பித்துள்ளார். அதே நேரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது, 8 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருந்ததாக தெரிவித்தார். 

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் வீரமணி தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன் சொத்து மதிப்பு 34.4 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது பெயரில் ஏலகிரியில் ஓட்டல் ஹில்ஸ், திருப்பத்தூரில் ஓட்டல் ஹில்ஸ், ஹரிஹரா ப்ராப்பர்டீஸ், ஹோம் டிசைனர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹோம் டிசைனர் உள்ளிட்ட நிறுவனங்கள் இருப்பதாக கணக்கு காண்பித்துள்ளார். இதன் மூலம் 10 ஆண்டுகளில் அமைச்சர் வீரமணியின் சொத்து மதிப்பு 1,500 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இது வேறு எந்த அமைச்சரும் காட்டாத வளர்ச்சி என்பதால் ஆளும் தரப்பே ஆடிப் போயுள்ளதாம். இந்த தகவல்களை ‘அறப்போர் இயக்கம்’ வெளியிட்டுள்ளது. 

seithichurul

Trending

Exit mobile version