தமிழ்நாடு

ஊரடங்கு, முழு ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரங்கள்!

Published

on

நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

துணிக்கடைகள் அழகு நிலையங்கள், ஆகியவற்றில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

கேளிக்கை விடுதிகள் உடற்பயிற்சிக் கூடங்கள் விளையாட்டுகள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் பார்வையாளர்களுடன் மதிக்கப்படும்.

திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

உள்விளையாட்டு அரங்கில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள் சலூன்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
இவ்வாறு ஊரடங்கின்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version