தமிழ்நாடு

ஈபிஎஸ், ஓபிஎஸ், செல்லூர் ராஜூ, மாபா பாண்டியராஜன் தொகுதிகளின் நிலவரம்!

Published

on

முதலமைசர் எடப்பாடி 6 ஆம் சுற்று நிலவரப்படி 36446 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 11881 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதால் முதல்வர் பழனிசாமி 24,565 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பி.எஸ் முன்னிலை. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 340 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு பின்னடைவு. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் சின்னம்மாள் முன்னிலை

கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி. சம்பத்துக்கு பின்னடைவு. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ஐயப்பன் முன்னிலை பெற்றார்

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 907 வாக்குகள் வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜய பாஸ்கரை முந்தினார்

ஆவடி தொகுதியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பின்னடைவு. திமுக வேட்பாளர் நாசர் 12,105 வாக்குகள் முன்னிலை.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் 14,448 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் முன்னிலை பெற்றார் திமுக வேட்பாளர் சேகர் பாபு. பாஜக வேட்பாளரை விட 1271 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

திருவொற்றியூர் தொகுதி 4-வது சுற்றில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவு. திமுக வேட்பாளர் கே.பி. சங்கர் முன்னிலை!

Trending

Exit mobile version