தமிழ்நாடு

பள்ளிகளை அடுத்து கல்லூரிகளுக்கும் விடுமுறையா? தமிழக அரசு ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை போலவே கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறியதால் மீண்டும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள் செய்து வருவதை அடுத்து கொரோனா வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரிகளுக்கும் தினமும் வரும் மாணவிகள் மாணவ-மாணவிகளின் சதவீதம் குறைந்து வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பு பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version