தமிழ்நாடு

‘இனிதான் மிக கவனம் தேவை!’- 3வது அலை குறித்து எச்சரித்த தமிழக அரசு

Published

on

தமிழ்நாட்டில் 3வது அலை கொரோனா தொற்றுப் பரவாமல் இருக்க பொது மக்கள் மிகக் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர், ‘இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அதிக தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இப்படி வரும் பட்சத்தில் பொது மக்கள் அலட்சியத்துடன் கண்டிப்பாக நடந்து கொள்ளக் கூடாது. வரும் வாரங்களில், மாதங்களில் தான் மக்கள் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இதையே தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக மக்கள் கூடும் இடம், மக்கள் அதிகமாக சேரும் இடம் போன்றவற்றில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்று அதிகமாக இருக்கும் இடங்களில் மிக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

நான் சொல்ல வருவதெல்லாம் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் மக்கள் பின்பற்றி, அதை ஓர் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இந்த உலகளாவிய நோயை அப்படிச் செய்வதன் மூலம் மட்டும் தான் நான் வெற்றி கொள்ள முடியும். தொடர்ந்து தளர்வுகளை அனுபவிக்க மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்’ என்று எச்சரித்து கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version