தமிழ்நாடு

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் – தமிழக அரசு எச்சரிக்கை

Published

on

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் செப்டம்பர் மாதம் முதல் குறைந்து வந்தது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது என்பதும் தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக 400 பேர் வரை மட்டுமே அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 500,600 என உயர்ந்து தற்போது 800ஐ தொட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழக அரசு சுதாரித்து தற்போது ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக முகக்கவசம் அணிவது தனிமனித இடைவேளையை கடைபிடிப்பது ஆகியவற்றில் மெத்தனம் காட்டி வரும் தமிழக மக்களுக்கு, தமிழக அரசு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது, அந்த வகையில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் முக கவசம் இன்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version