தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி தகவல்: டுவிட்டர் கணக்கை தொடங்கிய தமிழக அரசு

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்காக தமிழக அரசு பிரத்தியேகமாக டுவிட்டர் பக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நோயாளிக்கான படுக்கை வசதி குறித்த கூடுதல் தகவலை பெற @104_GoTN என்ற டுவிட்டர் கணக்கு உதவி செய்யும்.

இந்த வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேர்ஸ்டைல் பயன்படுத்தவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த டுவிட்டர் கணக்கில் சென்று எந்தெந்த நகரில் எந்தெந்த மருத்துவமனையில் படுக்கை வசதி காலியாக உள்ளது என்ற தகவலை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளது என்பது குறித்த தகவல்களை பெறுவதற்காக இணையதளம் ஒன்று தகவல் தெரிவித்து வருகிறது என்பதும் அந்த இணையதளத்தில் லிங்க் இதோ https://stopcorona.tn.gov.in/beds.php என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version