செய்திகள்

ஓமைக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டோம்… அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி..

Published

on

தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில் 3400 பேர் ஓமிக்ரன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரும் சிகிச்சையில் குணமடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் இதே நிலைதான். தற்போது ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர் ஒருவர் கூட மருத்துவமனையில் இல்லை. தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 179 பேரும் நலமடைந்து விடு திரும்பி விட்டனர். தற்போது ஓமிக்ரானுக்கு சிகிச்சை பெறுபவர் ஒருவர் கூட இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன்தமிழகத்தில் ஓமிக்ரான் பரிசோதனை நிறுத்துப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். ஏனெனில், கொரொனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 85 சதவீதம் பேருக்கு ஓமிக்ரான் பாசிட்டிவ் என வருகிறது. அதிலும், பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தவர்கள் குணமடைந்து விடுகின்றனர். எனவே, ஓமிக்ரான் பரிசோதனை தேவையில்லை என நிறுத்தப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது. ஒருபக்கம் பொங்கல் விடுமுறைக்கு பின் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version