தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதல்வர் அதிரடி அறிவிப்பு

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று சட்டமன்றத்தில் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அமலில் 59லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

தற்போது அரசு பணியில் இருக்கும் மற்றும் இந்த ஆண்டு 31.05.2020 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் விமர்சனங்களும் ஒரு சேர வந்து கொண்டிருக்கின்றன.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version