தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

Published

on

ரேஷன் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் ஒப்புதல் பெற்று நபரிடம் பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் பொருட்களை பெறுவதற்காக வரும் பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்றும் ஆன்லைன் மூலம் அனைத்து ரேசன் கடை அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு பொருட்கள் விநியோகம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version