தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: ஆனால் கடுமையான நிபந்தனைகள்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு உள்ளூரில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிந்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இரண்டும் ஒருசேர பாதித்து வருவதை அடுத்து ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சம் 150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு மட்டுமன்றி வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி என்றும், மாடுபிடி வீரர்கள் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என்றும் காளைகளை பதிவு செய்யும்போது உரிமையாளர், உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி என்றும், வெளி ஊரில் வசிப்பவர்கள் தொலைக்காட்சி, இணையதளம் வழியாக ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version