தமிழ்நாடு

மெரீனாவுக்கு தடை: கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று முதல் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதில் சென்னை மெரினாவுக்கு சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதி

வழிபாட்டு தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க அனுமதி

ஆனால் அதே நேரத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி

அனைத்து காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version