தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ்: தமிழக அரசு தீவிரம்!

Published

on

தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்த தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் அரசு முறை சுற்றுப்பயணங்களுக்காக ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முதலமைச்சர் உள்ளிட்ட விஐபிகள் மேற்பார்வை இடுவதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2005 ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412 இபி என்ற ரக ஹெலிகாப்டரை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வரும் நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் அந்த ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர் பயன்பாட்டில் இல்லாததால் அவசர காலங்களில் அதனை பயன்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

குறிப்பாக இந்த ஹெலிகாப்டரை மருத்துவ வசதிகாக பயன்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, ஏர் ஆம்புலன்ஸ் ஆக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

14 பேர் வரை பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர் 2005ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதும், இதுவரை 2,449 மணிநேரங்கள் மட்டுமே வானில் பறந்து உள்ளது என்றும், இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றுவதற்கு சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஹெலிகாப்டரை மருத்துவ காரணங்களுக்காக ஏர் ஆம்புலன்ஸ் மாற்றுவதன் சாத்தியக் கூறுகள் மற்றும் ஹெலிகாப்டரை இறக்கும் வசதிகள், மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் இறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள், அதற்கான செலவுகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் அவசரமான நோயாளிகள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஏற்கனவே இது போன்ற ஏர் ஆம்புலன்ஸ் வசதி கர்நாடக மாநிலத்தில் உள்ளது என்பதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக அவசரமாக வேறு மருத்துவனைக்கு மாற்றுவதற்கு இந்த ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகத்திலும் விரைவில் இந்த ஹெலிகாப்டர்களை ஏர் ஆம்புலன்ஸ் ஆக பயன்படுத்தும் முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version