தமிழ்நாடு

மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 முக்கிய தீர்மானங்கள்!

Published

on

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி ஆறு வழிப்பாதையில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதை எதிர்ப்பது குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாஜக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் மேகதாது அணைக்கு எதிராக 3 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

1) கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது.
2) தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்.
3) அனைத்துக் கட்சியினரும், நேரில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்துவது.

Trending

Exit mobile version