தமிழ்நாடு

இரண்டு நாள் திறந்து வைக்கப்பட்ட கோவில்கள் மீண்டும் மூடப்பட்டன: பக்தர்கள் அதிருப்தி!

Published

on

பொங்கல் மற்றும் தைப்பூசம் காரணமாக கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவில்கள் நேற்று முன்தினமும் நேற்றும் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பொங்கல் திருவிழாவை ஜனவரி 14ஆம் தேதி முதல் தை பூசம் நாளான ஜனவரி 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ச்சியாக கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வார இறுதி நாட்களில் கோவில்கள் மூடப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மீண்டும் அனைத்து கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இன்று காலை வழிபாட்டு தலங்களுக்கு சாமி கூட வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதை அடுத்தே வார இறுதி நாட்களில் கோவில்கள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் டாஸ்மாக் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டும் பக்தர்கள் கோவில்களை நிபந்தனையுடன் திறக்கலாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version