தமிழ்நாடு

ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் கிடையாது: தமிழ்நாடு அரசு

Published

on

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இனிமேல் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஓய்வு பெறக்கூடிய ஊழியர்க்ள் மீது பணி இடை நீக்கம் போன்ற நடவடிக்கை நடைபெறும் போது அதற்கு முன் எத்தனை மாதத்திற்கு முன்பாக பணியிடை நீக்கம் மாதிரியான நடவடிக்கை செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வதன் மூலம் அவர்களுக்கான சலுகைகள் பெற முடியாத நிலை ஏற்படுகிறது என்பதால், இறுதி நாளில் நடவடிக்கை எடுப்பதை விட அதற்கு முன்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விரிவான அரசாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் பற்றிய விசாரணை குறித்த காலத்தில் முடிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே அது குறித்த குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் ஓய்வு பெறும் நாளில் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்படுவதால் அவர்களுக்கான சலுகைகள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version