தமிழ்நாடு

தமிழக போலீசார் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு: தமிழக அரசு அரசாணை!

Published

on

தமிழகத்தில் உள்ள காவல் துறையினர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்த அரசாணையை சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏற்பட்டதிலிருந்து பல்வேறு சலுகை அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சற்றுமுன் தமிழக அரசு இதுகுறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தமிழக காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரை வாரம் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வார விடுமுறையை கட்டாயமாக்கி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று பிறப்பித்த உத்தரவுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக காவல்துறையினர் வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அது தற்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version