தமிழ்நாடு

காவல்துறை மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம்: தமிழக அரசின் அரசாணை!

Published

on

மறைந்த காமெடி நடிகரின் உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு சற்றுமுன்னர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது

விவேக் அவர்கள் சமூக சேவை செய்தவர் என்பது மட்டுமின்றி தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு அமைப்பில் தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது கலை சேவையை மற்றும் சமூக சேவையை கருத்தில் கொண்டு காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என சற்றுமுன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவரும், தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ்பெற்றவரும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகள் பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்த விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாரின் கலை மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக அன்னாரின் இறுதிச் சடங்குகளின் போது காவல்துறையை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Trending

Exit mobile version