தமிழ்நாடு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த அரசாணை வெளியீடு!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதும், அதனை அடுத்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்த அரசாணை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர்கள் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு இந்த அரசாணையில் குறிப்பிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தவில்லை என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்கள் விவரம் இருக்காது என்றும் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

seithichurul

Trending

Exit mobile version