தமிழ்நாடு

பள்ளி,கல்லூரிகளுக்கு தடை: மாணவர்கள் ஏமாற்றம்

Published

on

நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிவிப்பில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் தடையை நீடிப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகளை திறக்கலாம் என ஏற்கனவே ஆசிரியர் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதனை அடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து இதுகுறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார். எனவே நேற்றைய அறிவிப்பில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் ஆகஸ்டு 1ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் அறிவிக்கும் அறிவிப்பிலாவது பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதை அடுத்து ஆகஸ்ட் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் கல்லூரிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பும் விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version