தமிழ்நாடு

காய்கறி கடைகள் 12 மணி வரை மட்டுமே: தமிழகத்தில் மே 6ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் மே 6ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டின் படி மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், டாக்ஸிகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அதிகபட்சமாக 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வில் 50 பேர் இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

மளிகை கடை, தேனீர் கடைகள் ஆகியவை பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை. இந்த அதிரடி அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version